Skip to content
Thamizh Padam

News

News1 min read

பாலிவுட்டில் இசையமைக்க தயாராகும் அனிருத்!

பிரபல பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய் தமது படங்களில் மியூசிக்கிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர். அவர் இயக்கிய தனு வெட்ஸ் மனு, ராஞ்சனா மற்றும் ஜீரோ ஆகிய கதைகளில் இசை எவ்வாறு முக்கிய பங்கு வகித்தது என்பதே இதற்கு எடுத்துக்காட்டுகள். அத்துடன தனுஷ், அக்‌ஷய் குமார் மற்றும் சாரா அலி கான் ஆகியோர் நடிப்பில் இவர் இயக்கத்தில் அவரது வரவிருக்கும் அத்ரங்கி ரேவுக்கு கூட, ஏ.ஆர்.ரஹ்மானின் மேஜிக்கல் இசையை அவர் கமிட் செய்துகொண்டார்.

தனுஷ் படத்துக்காக அனிருத் இசையமைத்த கொலவெறி டி பாடலால் அனிருத்இந்தியா மட்டுமல்லாது உலகளவில் பிரபலமானார். கோலிவுட்டில் மட்டுமல்லாது, பாலிவுட்டிலும் தடம் பதித்த அனிருத், ஏற்கனவே பிஜாய் நம்பியாரின் பன்மொழி படமான டேவிட் மூலம் இந்தி உலகில் அறிமுகமானார். மேலும் டோலிவுட்டிலும் பணியாற்றியுள்ளார். இப்போது, ஆனந்த் எல் ராய் படம் மூலம் பிரத்யேக இந்தி படத்தில் அனிருத் பணியாற்றுவார் என கூறப்படுகிறது.

எனினும் அக்‌ஷய் குமார் நடிப்பில் ஆனந்த் எல் ராய் இயக்கவிருக்கும் ரக்ஷா பந்தன், செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்க்கை வரலாற்று படம் என எந்த படத்தில் அனிருத்துடன் அவர் கைகோர்ப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எப்படியோ இந்த காம்போ நிச்சயமாக அனைவரையும் கவரும் என ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளன

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp