Skip to content
Thamizh Padam

News

News1 min read

RRR படத்தில் இணைந்த அனிருத் - ரசிகர்கள் மகிழ்ச்சி !!

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவு கட்டத்திற்கு வந்து விட்டது என்பதும், இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த ஒரு படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் இணைந்து நடித்து வரும் இந்த திரைப்படத்தின் முக்கிய கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களுக்கு இசை அமைத்த எம்எம் கீரவாணி இசை அமைத்து வருகிறார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது இந்த படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் அனிருத் ஒரு புரமோஷன் பாடலை பாடி இருப்பதாகவும் அந்த பாடலின் ஒலிப்பதிவு சமீபத்தில் நடந்ததாகவும் கூறப்படுகிறது. அனிருத்துடன் இணைந்து ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்திற்காக பணி செய்து தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் அவர் மிகவும் திறமையானவர், சுறுசுறுப்பானவர் என்றும் எம்எம் கீரவாணி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து உங்களுடன் பணிபுரிந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் அனிருத் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

ஏற்கனவே ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் உள்பா பல இசையமைப்பாளர்களின் இசையில் அனிருத் பாடிய நிலையில் தற்போது எம்எம் கீரவாணி இசையிலும் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp