Skip to content
Thamizh Padam

News

News1 min read

Amala Paul Plays the lead role as Forensic Surgeon in Her Next

சினிமா துறையில் மீண்டும் மீண்டும் புதிய முயற்சி கையாளக்கூடிய நடிகைகளில் ஒருவர் அமலா பால், இவர் நடிக்கும் படங்களுக்கு என்ன சர்ச்சை வந்தாலும் அதெல்லாம் பொருட்படுத்தாமல் தைரியமாக படங்களில் நடிக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆகையால் படம் எந்த மாதிரி இருக்கும் என ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுகிறது எனலாம். இவர் நடிக்கிற படங்களை தொடர்ந்து புதிதாக இன்னொரு படத்திலும் இணைந்திருக்கிறார். இது அமலா பாலின் புதிய முயற்சி மட்டுமல்ல, இந்திய சினிமாவில் முதல் முயற்சியும் கூட.

அபிலாஷ் பிள்ளை கதை எழுத்துகிற இந்த படத்தை அனூப் பணிக்கர் இயக்கிறார். இந்த படம் நாயகியை மையப்படுத்திய கதையாம் முக்கியமாக தடய அறுவை சிகிச்சை நிபுணராக அமலா பால் நடிக்கிறார். இந்திய சினிமாவில் ஒரு நாயகி கதாபாத்திரம் தடயவியல் நிபுணராக இடம்பெறும் முதல் தடயவியல் புலனாய்வு திரில்லர் படம் மட்டுமில்லாமல் ஒரு மர்மமான வழக்கை தீர்க்க, அவர் கையாளும் தனித்துவமான வழிமுறைகளை சுற்றி நடக்கும் கதை.

மேலும், இந்த படம் கேரள முன்னாள் காவல்துறை மருத்துவர் டாக்டர் பி. உமாதத்தன் அவர்கள் கையாண்ட ஒரு உண்மையான வழக்கை அடிப்படையாகக் கொண்டது. சுவாரஸ்யமா சொல்லணுனும் என்றால் 'ராட்சசன்' படத்தின் படத்தொகுப்பாளர், கலை இயக்குனர், சண்டைப்பயிற்சியாளர் என ஏறக்குறைய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த படத்தில் பணியாற்ற இருக்கிறார்கள்.

இந்த படத்துக்கான பிரபல நடிகர்கள் பலருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவாதாவும் . விரைவில் இந்த படத்துக்கான பிரபல நடிகர்கள் மற்றும் மற்ற கலைஞர்களும் இறுதி செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது. ஏ.ஜே. ஃபிலிம்ஸ் நிறுவனம் மற்றும் ஒயிட் ஸ்கிரீன் மீடியா இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் 2019ல் தொடங்குகிறது. சென்னை மற்றும் கோயம்புத்தூரில் மொத்த படமும் படமாக்கப்பட இருக்கிறது.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp