அடங்காதே படத்திற்கு U/A சான்றிதழ் !!
ஜிவி பிரகாஷ் நடிப்பில் சண்முகம் முத்துசாமி என்பவர் இயக்கத்தில் உருவாக்கிய திரைப்படம் ’அடங்காதே’. ஜிவி பிரகாஷ், சுரபி, சரத்குமார், தம்பி ராமையா, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிந்து சமீபத்தில் சென்சாருக்கு சென்றது.
அப்போது சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு ’ஏ’ சான்றிதழ் கொடுப்பதாக கூறியதாகவும், ஆனால் படக்குழுவினர் இதனை எதிர்த்து ரிவைசிங் கமிட்டி சென்றதாகவும் கூறப்பட்டது. தற்போது ரிவைசிங் கமிட்டி இந்த படத்திற்கு ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. இதனை அடுத்து இந்த படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப் போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
ஜிவி பிரகாஷ் இசையில், ரவி யாதவ் ஒளிப்பதிவில் உருவாக்கிய இந்த படத்தை ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





