News1 min read
ஆக்ஷன்கிங் அர்ஜுன் இயக்கும் திரைப்படம் ஹைதராபாத்தில் இன்று முதல் படப்பிடிப்பு துவங்கியது
ஆக்ஷன் கிங் அர்ஜுன் தனது ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் மூலம் தயாரிக்கும் 15 வது படத்தை அவரே கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாக்க இருக்கிறார்.
கன்னட சினிமாவில் பிரபல நடிகரான உபேந்திராவின் அண்ணனின் மகனான நிரஞ்சன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார். மற்றும் சத்யராஜ், பிரகாஷ் ராஜ், ஜெயராம் முக்கிய கதாபாதிரத்தில் நடிக்க இவர்களுடன் அர்ஜுனும் இணைந்து நடிக்கிறார்.
ஒளிப்பதிவு - பாலமுருகன்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் அர்ஜுன்
சத்யராஜ் மற்றும் நாயகன் நிரஞ்சன், நாயகி ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கும் காட்சிகள் பரபரப்பாக படமாக்கப்பட்டு வருகிறது.
மக்கள் தொடர்பு
மதுரை செல்வம்.
மணவை புவன்.





