Skip to content
Thamizh Padam

News

News1 min read

சிவா ராஜ்குமார் - அபிஷன் ஜீவிந்த் இணையம் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Abishan Jeevinth & Siva Rajkumar Movie Wrapped

'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த இளம் இயக்குனர் மற்றும் நடிகரான அபிஷன் ஜீவிந்த், கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமான டாக்டர் சிவா ராஜ்குமாருடன் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

'டிராமா கம்பெனி' (Drama Company) தயாரிப்பில், கௌதம் சிவராமன் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் அபிஷன் ஜீவிந்த் 'சுகன்' என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சிவானி நகாரம் நடிக்கிறார். மேலும் யோகலக்ஷ்மி, கானா வினோத், சங்கீதா மாதவன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிவடைந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம், படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளது. அதில், "அன்பு, நட்பு, சிரிப்பு மற்றும் கடின உழைப்புடன் இந்த பயணம் இனிதே நிறைவடைந்தது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

லியோன் ஜேம்ஸ் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related stories

See all
1 / 2

சிவா ராஜ்குமார் - அபிஷன் ஜீவிந்த் இணையம் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Share on WhatsApp

Share

Share on WhatsApp