Skip to content
Thamizh Padam

News

News1 min read

தாய் மண்ணிற்கு திரும்பும் பிரித்திவிராஜ்

கொரோனா காரணமாக உலகின் பல பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மலையாள நடிகர் பிரித்திவி ராஜ் தனது ‘ஆடுஜீவிதம்' படக்குழுவினர் 58 பேருடன் ஜார்டனில் சிக்கித்தவித்தார். அதையடுத்து அவர், தனக்கும் 58 உறுப்பினர்களைக் கொண்ட அவரது குழுவினருக்கும் வீட்டிற்கு வர உதவுமாறு இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தனர்.

அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் தங்களின் நிலை குறித்து தெளிவுபடுத்தினார். அவரும் அவரது குழுவினரும் நன்றாகவும், தவறாமல் குழு மருத்துவர் மற்றும் ஜோர்டான் அரசாங்க மருத்துவர்களால் சோதிக்கப்பட்டு வருகின்றோம் என்று கூறினார்.

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியர்கள் தாயகம் திரும்பி வரும் நிலையில், இன்று ப்ரித்திவி ராஜ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ஆடுஜீவிதம் படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் விரைவில் அவரும் அப்படக்குழுவும் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp