Skip to content
Thamizh Padam

News

News1 min read

7 வருடங்களை கடந்த நேரம்

நேரங்களை கடந்த நேரம் !! கடந்து வந்த பாதையை நினைவு கூறிய நிவின் பாலி.

இயக்குனர் அல்போன்ஸ் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டில் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியான திரைப்படம் தான் நேரம். ஒரு மனிதனுக்கு நேரம் என்ற விஷயம் பாதகமாக இருந்தால் எப்படி இருக்கும், அதே நேரத்தில் அந்த நேரம் அந்த மனிதனுக்கு சாதகமாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை கலந்த கதையாக எடுத்து இரு மொழிகளிலும் பெரிய வெற்றியை பெற்றது இந்த படம்.

இந்த படத்தில் நிவின் பாலியுடன் கதாநாயகியாக நஸ்ரியா மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்நிலையில் இந்த படம் வெளியாகி 7 ஆண்டுகள் கடந்துவிட்டதை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் நிவின் பாலி.

மேலும் அந்த படத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் நிவின் பாலி இயக்குநர் அல்போன்ஸ் மற்றும் நடிகை நஸ்ரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தற்போது இந்த புகைப்படங்களை நிவின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

சினிமா பற்றிய தகவல்களை உடக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் படத்துடன் இணைந்திருங்கள்!!

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp