Skip to content
Thamizh Padam

News

News1 min read

வாழ்த்து செய்தி!!! யார் யாருக்கு ?

திரைக் கலைக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்படும் ஒவ்வொரு முறையும் பேரார்வமும், எதிர்பார்ப்பும் பெருகிடும். இன்று பேரின்பச் செய்தியாக தமிழ் திரைப்பட உலகிற்கு வந்து சேர்ந்திருக்கிறது. பல்துறைக்கான முக்கிய விருதுகள் தமிழுக்கு கொண்டு சேர்த்த,

சிறந்த நடிகர் - சூர்யா (சூரரை போற்று)

சிறந்த திரைப்படம் - (சூரரை போற்று)

சிறந்த திரைக்கதை - சுதா கோங்குரா (சூரரை போற்று)

சிறந்த நடிகை - அபர்ணா பாலமுரளி (சூரரை போற்று)

சிறந்த பின்னணி இசை - ஜி.வி.பிரகாஷ் (சூரரை போற்று)

சிறந்த தமிழ் திரைப்படம் - சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

சிறந்த படத்தொகுப்பாளர் - ஸ்ரீகர் பிரசாத் (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்)

சிறந்த அறிமுக இயக்குனர் - மடோன் அஸ்வின் (மண்டேலா)

சிறந்த வசனம் - மடோன் அஸ்வின் (மண்டேலா)

சிறந்த துணை நடிகை - லட்சுமிப்ரியா சந்திரமௌலி (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்)

இவர்கள் அனைவரையும் தென்னிந்திய நடிகர் சங்கம் மனம் பூரித்து வாழ்த்துகிறது.
இதுமட்டுமல்லாது, தேசிய விருது பெற்றுத் திளைக்கும் மற்ற மொழித் திரை கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது.

Read alsoNadhi Tamil Movie Review

இவ்விருதுகள் இந்திய சினிமாவை மற்றுமொரு மேல் தளத்திற்கு கொண்டு செல்லும் என்ற நம்பிக்கையை வளர்க்கிறது. வாழ்த்துக்கள்!

நன்றி!

தென்னிந்திய நடிகர்கள் சங்கம்

M.நாசர்,
தலைவர்.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp