Skip to content
Thamizh Padam

News

News1 min read

5 Reasons To Watch Sindhubaadh

சிந்துபாத்

ஓவ்வோரு தமிழ் படம் வெளிவரும் போதும் ஏன் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்பதற்கான ஐந்து காரணத்தை தற்போது பார்க்கலாம்.

  1. சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிக்கும் படம் என்பதால் நிறைய எதிர்பார்ப்பு சிந்துபாத் படத்துக்கு இருக்கின்றது. முக்கியமாக விஜய் சேதுபதி நடிக்கின்ற படம் எல்லாமே வித்தியாசமான கதாபாத்திரத்திலும், கதையும் தேர்ந்தெடுத்து நடித்து வருக்கின்றார். அந்த வகையில் சிந்துபாத் படமும் இருக்கும் என்று சந்தேகமே இல்லமால் பார்க்க கூடிய படமாக இருக்கும்.
  2. குறிப்பாக இந்த படத்தினுடைய ட்ரைலர் பார்த்த வரையில், அஞ்சலியை காதலித்து கல்யாணம் செய்துகொண்ட அடுத்த நாளே அஞ்சலியை யாரே கடத்திட்டு போறமாதிரி இருக்கு. அஞ்சலியை காப்பாத்தாதான் விஜய் சேதுபதி போகிறார் என்பதும் போல் உள்ளது. மொத்தத்தில் அச்டின் மற்றும் திரில்லர் கலந்த கதையாக இருக்கும் சிந்துபாத் படத்தை தென்காசி மற்றும் தாய்லாந்து என்று படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். நிச்சயமாக தியேட்டரில் படம் பார்க்கும் போது வேறு விதமான அனுபவத்தை இந்த படம் நமக்கு தரும்.
  3. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வைத்து ஏற்கனவே இயக்குனர் எஸ் யு அருண்குமார் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி போன்ற படத்தை இயக்கியுள்ளார். இரண்டு படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதே போல் தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் வரும் மூன்றாவது படம்தான் சிந்துபாத். ஆகையால் இந்த படமும் மக்களிடம் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெரும் என்று நம்பிக்கையுடன் சொல்லலாம்.
  4. சிந்துபாத் படத்தில் விஜய் சேதுபதி தவிர அஞ்சலி, விஜய் சேதுபதி மகன் சூர்யா, விவேக் பிரசன்னா என்று நடிப்பில் பட்டையை கிளப்புக்கின்ற நடிகர்கள்தான் சிந்துபாத் படத்தில் நடித்திருக்கிறார்கள். முக்கியமாக அஞ்சலி முதல் முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளர். ஆகையால் இவங்களுடைய ஜோடி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும், இன்னொரு பக்கம் விஜய் சேதுபதி மகன் சூர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தியுள்ளார் என்று ட்ரைலர் பார்த்தவரையும் சொல்ல முடிகிறது.
  5. சிந்துபாத் படத்தினுடைய இசைமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாதான். ட்ரைலர் மூலமாகவே பயங்கரமான பின்னணி இசையில் கலக்கி இருக்கின்றார். அதே போல் வெளியாகிருந்த பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இதனால் படம் முழுவதும் யுவனின் இசைக்காக வர கூடிய ரசிகர்கள் ஏராளமாக இருக்கும் என்று சொல்லாம். இதை தவிர்த்து இந்த படத்தினுடைய டெக்னிகல் குழுவும் படத்தை பக்கவாக கொடுத்திருப்பார்கள் என்று நம்பிக்கையுடன் சொல்ல முடியும் .

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp