Skip to content
Thamizh Padam

News

News1 min read

20 வருடங்கள் கடந்த ரவி வர்மன் என்ற கலைஞன் !

இருபது வருடங்கள் கடந்த பெருமையான பயணம் ரவி வர்மன் எனும் புகைப்பட கலைஞன்.

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கில மொழிகளில் பல படங்களில் பணியாற்றியுள்ளார். அவர் சினிமா துறையில் பயணம் செய்யத் தொடங்கி இந்த ஆண்டுடன், தனது 20-வது ஆண்டை வெற்றிகரமாக கடக்கிறார். ‘ஜலமர்மரம்' திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளர் மலையாளத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் பிற மொழிகளிலும் பணியாற்றினார்.

ரவி வர்மன் கடந்த இருபது ஆண்டுகளில் தனது படைப்புகளின் தொகுப்பின் வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ அவரது அழகான ஃபிரேம்கள் மற்றும் காட்சிகளை பட்டியலிடுகிறது. பார்ப்பவர்களை மேலும் பிரம்மிக்க வைக்கிறது. இவரையும், இவரது படைப்புகளையும், தொடரும் இவரது சினிமா பயணத்தையும் பலரூம் சமூக வலைதளங்களில் பாராட்டி வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

அதேபோல், ‘ஆஸ்கர் நாயகன்' இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானும் அதே வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, ரவிவர்மனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் “சிறப்பான 20 ஆண்டுகள்! எங்களுக்கு ஊக்கமளித்ததற்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp