Tribute1 min read
தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சற்றுமுன் காலமானார்
புரட்சி கலைஞர் நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் 28-12-2023 இன்று காலையில் அவர் காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த அறிவிப்பு தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள் மட்டுமின்றி பொது மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.





