Skip to content
Thamizh Padam

Event

Audio launch1 min read

தனி ஹெலிகாப்டர் மூலம் பேட்ட இசை வெளியீட்டு விழாவிற்கு வரவழைக்கப்பட்ட விஜய் சேதுபதி

டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து பொங்கலுக்கு வெளிவர இருக்கின்ற படம்தான் பேட்ட. இந்த படத்தோட இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்புதான் நடந்தது.

அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் எல்லோரும் கலந்து கொண்ட இந்த விழாவில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மட்டும் தாமதமாக வந்திருந்தார். இதனால் பேட்ட இசை வெளியீட்டு விழாவில் அவருக்கு கரகோஷங்கள் ரசிகர்கள் மத்தியில் வானை பிளந்தது.

இந்நிலையில் இந்த தாமதத்திற்கு என்ன காரணம் என்று பார்த்தபோது, நடிகர் விஜய் சேதுபதி வேறொரு படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்தாதாவும். இதனால் வர முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட கூடாது என்பதற்காக அவருக்கென தனியாக ஹெலிகாப்டரை அனுப்பி வைத்துள்ளது இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ்.

மேலும் இவ்விழா முடிந்ததும் வந்த அதே ஹெலிகாப்டரின் மூலமே பாதியில் தான் விட்ட படப்பிடிப்பிற்கு சென்றுள்ளார் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp