Skip to content
Thamizh Padam

OTT

OTT1 min read

சிவகார்த்திகேயன் டாக்டர் படம் OTT யில் வருகிறதா ? - அதிர்ச்சி தகவல் !!

சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு சில மாதங்கள் ஆன நிலையிலும் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் இந்த படம் வெளியாக முடியாத நிலையில் உள்ளது. மேலும் ஓடிடியில் இந்த படம் வெளியாவதில் சிக்கல் இருப்பதால் ஓடிடியில் ரிலீஸ் செய்யமுடியாத நிலை ஏற்பட்டதாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து செய்திகள் வெளியானது

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி வருவதை அடுத்து அடுத்த மாதம் திரையரங்குகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ‘டாக்டர்’ படத்தை நேரடியாக திரையரங்கில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’ படத்தை இயக்கி வரும் நெல்சன் இயக்கியுள்ள ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் வில்லனாக நடிகர் வினய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp