Skip to content
Thamizh Padam

Bigg Boss

Bigg Boss1 min read

ரைசாவுக்கு மீண்டும் பழைய முகம் திரும்பியது !!

சமீபத்தில் அழகுகளை மருத்துவர் பைரவியின் தவறான சிகிச்சை காரணமாக தனது முகம் வீங்கி விட்டதாகவும் அதற்காக ஒரு கோடி ரூபாய் மருத்துவர் தனக்கு நஷ்ட ஈடு அவர் கொடுக்க வேண்டும் என்றும் நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான ரைசா வில்சன் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இதற்கு பதில் நோட்டீஸ் அனுப்பி இருந்த மருத்துவர் பைரவி ரைசாவுக்கு வந்திருப்பது மிகவும் அரிதாக வந்திருக்கும் அலர்ஜி என்றும் இது தானாகவே சரியாகி விடும் என்றும் கூறியிருந்தார். மேலும் தனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்திய ரைசா தனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

ரைசா வில்சன் மற்றும் டாக்டர் பைரவி மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வந்த நிலையில் தற்போது டாக்டர் பைரவி கூறியபடியே ரைசா முகம் மீண்டும் பொலிவாகிவிட்டது. இது அவர் தனது சமூக வலைத்தளத்தில் சமீபத்தில் பதிவு செய்த புகைப்படத்தில் இருந்து தெரியவருகிறது. மருத்துவர் கூறியபடியே அவரது முகம் தற்போது தானாக சரியாகி விட்டதை அடுத்து தனது கருத்துக்கு ரைசா வில்சன் மன்னிப்பு கேட்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp