Skip to content
Thamizh Padam

Event

Success meet4 min read

பேச்சி படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா !!!

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் விநியோக தலைமையாளர் குகன் பேசுகையில், “ஆடி அமாவாசை, பிரண்ட்ஸிப் டே இந்த தருணத்தில் தான் பேச்சி படம் வெளியானது. பேச்சி அவளோட இடத்தை எடுத்துட்டானு உறுதியாக சொல்லலாம். பிரண்ட்ஸ் அனைவரும் சேர்ந்து திறமையை மட்டுமே நம்பி ஒரு படம் எடுக்குறாங்க. படம் முடிந்து வெளியீட்டுக்கு வரும் போது அங்கும் நண்பர்கள் சேர்ந்து படத்தை வெளியிடுகிறார்கள், அவர்கள் தான் வெரூஸ். கோகுல் பினாய் உள்ளிட்ட வெயிலோன் டீம் மற்றும் வெரூஸ் நிறுவனத்தின் முஜிப், சஞ்சய், ராஜராஜன் உள்ளிட்டவர்களுக்கு நன்றி. தமிழ் சினிமாவின் உயிர் நாடியே சிறிய படங்களின் வெற்றி தான். பேச்சி போன்ற படங்கள் அதை நிரூபிக்கும் போது சினிமாவுக்கு உயிரோட்டமாக இருக்கும். படம் முடிந்த பிறகு வியாபார சம்மந்தமானவங்க ஈடுபடுபவார்கள். அந்த வகையில், வியாபார ரீதியாக பேச்சி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. தமிழகத்தை கடந்து கர்நாடகாவில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கான வியாபாரம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்தி உரிமை உள்ளிட்ட அனைத்து வியாபாரமும் நல்லபடியாக நடந்திருக்கிறது. முஜிப் சார் சொன்னது போல் சிறிய படம், பெரிய படம் என்பது தாண்டி ரசிகர்கள் மனதில் எந்த அளவுக்கு பதிந்திருக்கிறது என்பது தான் முக்கியம். அந்த வகையில், ரசிகர்கள் மனதில் பெரிய படமாக பதிந்ததற்கு பத்திரிகை நண்பர்கள் தான் காரணம், அவர்களுக்கு நன்றி. அதேபோல் படத்தின் இயக்குநர் ராமச்சந்திரன் சார், ஒளிப்பதிவாளர் பார்த்திபன், படத்தொகுப்பாளர் அஸ்வின் அனைவருக்கும் நன்றி. பாலசரவணன், காயத்ரி, தேவ் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் படத்தின் விளம்பர பணிகளுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள், அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பேச்சியின் இந்த வெற்றி இன்னும் தொடரும் என்று நம்புகிறேன். பேச்சி முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் மீது மக்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாங்களும் இந்த குழுவினருடன் இணைந்து பேச்சி இரண்டாம் பாகத்தை எதிர்பார்க்கிறோம், என்று தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.

இயக்குநர் B.ராமச்சந்திரன் பேசுகையில், “இரண்டு வாரங்களுக்கு முன்பு உங்களை சந்தித்தோம், இப்போது மீண்டும் சந்திப்பது மகிழ்ச்சி. பேச்சி படத்தின் வெற்றி மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா என்பது முதல் பட இயக்குநராக எனக்கு மிக முக்கியமானது. பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு காட்சி திரையிடுவது உள்ளிட்ட அனைத்து விசயங்களும் படத்திற்கான விளம்பரத்திற்காக தான் என்றாலும், என்னை பொறுத்தவரை பத்திரிகையாளர்களுக்கு போடப்பட்ட காட்சி தான் எனக்கான முக்கியமான தருணம். படம் போட்ட பிறகு நான் பதற்றத்துடன் நின்றுக் கொண்டிருந்தேன், காரணம் நீங்கள் தான் முதல் நீதிபதி, அனைத்து படங்களையும் பார்த்துவிட்டு நீங்கள் தான் எப்படி இருக்கிறது என்று சொல்லப் போறீங்க. அந்த வகையில், என் படத்தை பார்த்துவிட்டு, “தம்பி நல்லா பண்ணியிருக்கீங்க” என்று தட்டிக்கொடுத்த பிறகு தான் எனக்கு நம்பிக்கை வந்தது. உங்களால் தான் படம் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருக்கிறது, அதனால் முதல் நன்றி உங்களுக்கு தான்.

அறிமுக இயக்குநராக நான் எவ்வளவு பெரிய ஐடியாவை வைத்து கதை எழுதினாலும், அதை திரைப்படமாக தயாரிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய விசயம். பல படங்கள் தயாரித்து, சினிமா வியாபாரம் தெரிந்த ஒரு தயாரிப்பாளர் இந்த படம் நல்லா வரும், என்று முடிவு செய்து தயாரிக்கலாம். ஆனால், என்னுடன் நண்பனாக பழகிவிட்டு, என் மீது நம்பிக்கை வைத்து, என்னுடன் தயாரிப்பாளராக பயணித்த கோகுல் பினாயின் தைரியத்தை நிச்சயம் பாராட்டியாக வேண்டும், அவருக்கு எனது இரண்டாவது நன்றி. பிறகு எனது தொழில்நுட்ப கலைஞர்கள், நான் என்ன சொல்வேன், என் சிந்தனை எப்படி இருக்கும் என்பதை புரிந்துக்கொண்டு எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தவர்களுக்கு நன்றி. படத்தில் நடிகர், நடிகைகளும் எனக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார்கள். கடினமான இடங்களில் படப்பிடிப்பு நடத்தினாலும் எந்தவித கஷ்ட்டத்தையும் வெளிக்காட்டாமல் நான் என்ன சொன்னாலும் அதை செய்த பாலசரவணன், காயத்ரி ஆகியோருக்கு நன்றி. பேச்சியாக நடித்த சீனிபாட்டி இந்த வயதிலும் மலைமீது பயணித்து நடித்துக் கொடுத்தார், அவருக்கு பெரிய நன்றி. இன்று ரசிகர்கள் பேச்சி பாட்டி எங்கே என்று கேட்கிறார்கள்.

பல வருடங்களுக்கு முன்பு பேச்சி என்ற தலைப்பில் ஒரு குறும்படம் எடுத்தேன், அந்த படத்தை பார்த்துவிட்டு பாலுமகேந்திரா சார் என்னை பாராட்டியதோடு, அவருடன் என்னை சேர்த்துக்கொண்டு எனக்கு சினிமா சொல்லிக்கொடுத்தார். அவருக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல், வங்கி வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு நான் வந்தபோது எனக்கு உறுதுணையாக இருந்த என் குடும்பத்தாருக்கும், என்னுடன் எப்போதும் துணை நின்ற என் நண்பர்கள் என அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.

படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ஜென பேசுகையில், “பேச்சி என்ற சிறிய படத்தை மிகப்பெரிய இடத்திற்கு கொண்டு சென்ற மீடியாக்களுக்கு மிகப்பெரிய நன்றி. எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ராமச்சந்திரன் சாருக்கும், கோகுல் பினாய்க்கும் நன்றி. எனக்கு இது தான் முதல் ஸ்கீரின் பிரசன்ஸ். இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, இப்படி ஒரு வாய்ப்பை அமைத்துக்கொடுத்த அனைவருக்கும் நன்றி.” என்றார்.

நடிகர் தேவ் பேசுகையில், “இரண்டு வாரங்களுக்கு முன்பு இதே இடத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதற்கு காரணம் கோகுல், ராமச்சந்திரன் சார், வெரூஸ் நிறுவனத்தார். ஆனால், இன்றைய நிகழ்ச்சி நடப்பதற்கு பத்திரிகை, ஊடகங்கள் மற்றும் மக்கள் தான் காரணம். வெற்றி விழா சந்திப்பு என்று சொன்னார்கள், ஆனால் இது வெற்றி விழா என்பதை விட நன்றி தெரிவிக்கும் விழா என்றால் தான் சரியாக இருக்கும், அதனால் உங்களுக்கு மிகப்பெரிய நன்றிகள். ராமச்சந்திரன் சார் சொன்னது போல், நிறைய சிறப்பு காட்சிகள் போட்டோம். ஆனால், அவர்கள் சொன்னதில் எங்களுக்கு எந்த நம்பிக்கையும் வரவில்லை. ஆனால், படம் வெளியாவதற்கு ஒரு நாளுக்கு முன்பு பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு காட்சி திரையிட்டோம், அந்த காட்சியில் உங்களிடம் கிடைத்த பாராட்டுக்குப் பிறகு தான் எங்களுக்கு நம்பிக்கை வந்தது. படம் பத்து நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது, இந்த வெற்றி தொடர உங்கள் ஒத்துழைப்பு வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். படத்தின் விளம்பர பணிகளை மிக சிறப்பாக செய்து வரும் தர்மா உள்ளிட்ட பி.ஆர்.ஓ குழுவுக்கு நன்றி, எங்களுடன் சேர்ந்து புது புது ஐடியா கொடுத்து சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். ட்ரீம் வாரியர்ஸ் குகன் என அனைவரும் இந்த சிறிய குழுவுக்கு மிகப்பெரிய ஆதரவு கொடுத்திருக்கிறார்கள், அனைவருக்கும் நன்றி.” என்றார்.

Who said what

ட
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் விநியோக தலைமையாளர் குகன்ஆடி அமாவாசை, பிரண்ட்ஸிப் டே இந்த தருணத்தில் தான் பேச்சி படம் வெளியானது. பேச்சி அவளோட இடத்தை எடுத்துட்டானு உறுதியாக சொல்லலாம். பிரண்ட்ஸ் அனைவரும் சேர்ந்து திறமையை மட்டுமே நம்பி ஒரு படம் எடுக்குறாங்க. படம் முடிந்து வெளியீட்டுக்கு வரும் போது அங்கும் நண்பர்கள் சேர்ந்து படத்தை வெளியிட…
B
B.ராமச்சந்திரன்இயக்குநர்இரண்டு வாரங்களுக்கு முன்பு உங்களை சந்தித்தோம், இப்போது மீண்டும் சந்திப்பது மகிழ்ச்சி. பேச்சி படத்தின் வெற்றி மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா என்பது முதல் பட இயக்குநராக எனக்கு மிக முக்கியமானது. பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு காட்சி திரையிடுவது உள்ளிட்ட அனைத்து விசயங்களும் படத்திற்க…
ப
படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ஜெனபேச்சி என்ற சிறிய படத்தை மிகப்பெரிய இடத்திற்கு கொண்டு சென்ற மீடியாக்களுக்கு மிகப்பெரிய நன்றி. எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ராமச்சந்திரன் சாருக்கும், கோகுல் பினாய்க்கும் நன்றி. எனக்கு இது தான் முதல் ஸ்கீரின் பிரசன்ஸ். இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார…
த
தேவ்நடிகர்இரண்டு வாரங்களுக்கு முன்பு இதே இடத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதற்கு காரணம் கோகுல், ராமச்சந்திரன் சார், வெரூஸ் நிறுவனத்தார். ஆனால், இன்றைய நிகழ்ச்சி நடப்பதற்கு பத்திரிகை, ஊடகங்கள் மற்றும் மக்கள் தான் காரணம். வெற்றி விழா சந்திப்பு என்று சொன்னார்கள், ஆனால் இது வெற்றி விழா என்பதை வ…

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp