Skip to content
Thamizh Padam

Tribute

Tribute1 min read

கே வி ஆனந்த் மறைவுக்கு வைரமுத்து கவிதை அஞ்சலி !!

பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கேவி ஆனந்த் அவர்கள் இன்று காலை மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த செய்தி திரையுலகினருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. விவேக் மற்றும் தாமிரா ஆகியோர் அடுத்தடுத்து காலமான நிலையில் இன்று மேலும் ஒரு பிரபலம் மறைந்துள்ளது திரை உலகுக்கு பேரிழப்பு தான் என்று கூற வேண்டும்

இந்த நிலையில் இயக்குநர் கேவி ஆனந்த் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் இமயம் பாரதிராஜா மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் தங்கள் சமூக வலைதளங்களில் இரங்கலை தெரிவித்து உள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது

வைரமுத்து தனது டுவிட்டரில் கூறியதாவது:

வருந்துகிறேன் நண்பா!

திரையில்
ஒளிகொண்டு
சிலை செதுக்கினாய்!

வாஜி வாஜி பாடலை
ராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்!

என்
எத்தனையோ பாடல்களை
ரத்தினமாய் மாற்றினாய்!

இதோ
உனக்கான இரங்கல்பாட்டை
எங்ஙனம் படம் செய்வாய்?

விதவையான கேமரா
கேவிக்கேவி அழுகிறது
கே.வி.ஆனந்த்!

ஒளியாய் வாழ்வாய்
இனி நீ.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp