Skip to content
Thamizh Padam

Bigg Boss

Bigg Boss1 min read

Bigg Boss நாள் 3 : அனிதா என்ன தான்மா உங்க பிரச்னை ?? - மக்கள் கவனிக்கின்றனர்

நேத்து Bigg Boss கொஞ்சம் போர் தான் போல, கொஞ்சம் கதை, கொஞ்சம் ட்ராமா அப்டியே போயிருச்சு. ஆனா உண்மையா சொன்னா, ஆரி கதை டச்சிங்'ஆஹ் தான் இருந்துச்சு. மனுஷன் ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு இடத்துக்கு வர போராடிட்டு இருக்காரு. Bigg Boss மேடையுடைய பத்தின அவருடைய பார்வைய அழகா பதிவு பண்ணாரு. அப்புறம் அவுங்க அம்மாக்கு நடந்த சோகம் மக்களை கண்கலங்க வச்சுருச்சுனு தான் சொல்லணும். அந்த மனுஷனோட நல்ல மனசுக்கு கண்டிப்பா பெருசா வருவாப்ல.

கேபிரில்ல, தணுஷ் நடிச்ச 3 படத்துல வாய் பேச முடியாம, ரொம்ப அழகா நடிச்சுருப்பாங்க. இப்பவும் அவுங்கள பாக்குறப்ப ஒரு நல்ல performer ஆஹ் தான் பாக்க தோணுது. அவுங்க லைப்ல நடந்த விஷயங்களை பகிர்ந்துக்கிட்டாங்க. அப்புறம் நடிகை ரேகா matured ஆனா ஒரு ஸ்பீச்ச குடுத்துட்டு போய்ட்டாங்க.

Read alsoRead Bigg Boss Day 1 Highlights here

Read alsoRead Bigg Boss Day 2 Highlights here

மற்ற Teammates-லாம் இணைக்கு பேசுவாங்க. சரி matter-க்கு வருவோம். அனிதா பொண்ணுக்கு என்னதான் பிரச்சனை. ரொம்ப தெளிவா விளையாடுறோம்னு நெனச்சுட்டு தேவயில்லாத வேலைய தான் பாக்குறாங்களோனு தோணுது. அந்த பெரியமனுஷன் அவருக்கு உங்களுக்கும் ஒத்துபோகலன டீசென்ட்'ஆஹ் ஒதுங்கிக்கனும். தேவ இல்லாம வாய குடுத்து அப்புறம் அழுது சிம்பதி create பண்ண பாக்குறது தப்பு. 2வது நாள் எபிசொட்ல அவரு எல்லா நியூஸ் ரிடெர்களையும் சொன்னாருன்னு சொன்னாங்க, ஆனா இணைக்கு வந்துகுருக்க ப்ரோமோல இல்லை னு சொல்ராங்க. எதுக்காக இப்டி மாத்தி மாத்தி பேசுறாங்க அனிதா ? சரி காத்திருப்போம் கமலஹாசன் வருகைக்கு.குறும்படம் தெளிவு படுத்தும்.இப்போ அனிதாவுடைய இந்த நடத்தை சரியா ? தவறா ? என்ற உங்ககளுடைய கருத்துக்களை பதிவு செய்யலாம். மேலும் Bigg Boss பத்தின கட்டுரைகளுக்கு தமிழ் படத்துடன் இனைந்திருங்கள்.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp