
விமல் - ஆஷ்னா சவேரி நடிக்கும் கிளாமர் படம்
சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் படம் “ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “ விமல் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார். மற்றும் ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலீஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார். முதல் முறையாக ஆங்கில நடிகை “ மியா ராய் “ கன்பைட் காஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் 20 நாட்களும் , சென்னை, தென்காசி, குற்றாலம் பகுதிகளில் 30 நாட்களும் நடைபெற்றது. ஒளிப்பதிவு - கோபி ஜெகதீஸ்வரன் இசை - நடராஜன் சங்கரன் பாடல்கள் - விவேகா கலை - வைரபாலன் நடனம் - கந்தாஸ் ஸ்டண்ட் - ரமேஷ். எடிட்டிங் - தினேஷ் தயாரிப்பு மேற்பார்வை - சுப்ரமணி தயாரிப்பு நிர்வாகம் - பி.ஆர்.ஜெயராமன் தயாரிப்பு - சர்மிளா மாண்ரே, ஆர்.சர்வண் திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் AR.முகேஷ்.
More photos






