Skip to content
Thamizh Padam

Video

காதலர் தின வாழ்த்துக்களுடன் ராமம் ராகவம் படத்தின் கிளிம்ஸ் வெளியானது

Thamizh Padam
Share

சமுத்திரக்கனி, மற்றும் தன்ராஜ் கொரானானி நடிப்பில் ராமம் ராகவம் படத்தின் வீடியோ கிளிம்ஸ் வெளியானது. இந்த வீடியோவில் ஒரு தந்தை-மகன் இருவருக்கும் இடையிலான பாசத்தை வெளிக்காட்டும் விதமாக இருக்கிறது. ‘ஹேப்பி வாலண்டைன்ஸ் டாடி’ என்ற டேக்லைனுடன் வீடியோ முடிகிறது. இந்த ராமம் ராகவம் படத்தின் மூலம் நடிகர் தன்ராஜ் இயக்குநராகிறார். மேலும் இந்த படத்தில் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், ப்ருத்விராஜ், சத்யா, மோக்ஷா சென்குப்தா, பிரமோதினி மற்றும் ஸ்ரீனிவாஸ் ரெட்டி போன்ற நடிகர்கள் உள்ளனர். அருண் சிலுவேரா ராமம் ராகவம் படத்திற்கு இசையமைப்பாளர் இசையமைக்க. துர்கா பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, மார்த்தாண்டன் கே.வெங்கடேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். படத்தை ப்ருத்வி போலவரபு தயாரித்துள்ளார்.

Share

Share on WhatsApp