Skip to content
Thamizh Padam

Photos

0 photosactor

பாகுபலி அடுத்த பாகத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முடிவெடுத்த ராஜமௌலி !!

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவான ’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் உலக அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த திரைப்படங்கள் இந்தியாவிலேயே அதிக வசூலான திரைப்படங்கள் பட்டியலில் இணைந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ’பாகுபலி’ முதல் பாகத்திற்கு முன்பு என்ன நடந்தது என்பதை விளக்கும் வகையில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாகவும், ஆனால் இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடிக்காக உருவாக இருப்பதாகவும் செய்திகள் ஏற்கனவே வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த செய்தி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும் ஒரு ஆச்சரிய தகவலாக ’பாகுபலி’யின் முந்தைய பாக வெப்தொடரில் முக்கிய வேடத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நயன்தாராவின் முதல் நேரடி ஓடிடி வெப்தொடரும் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் வரும் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அடுத்த ஆண்டு இந்த வெப்தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய இரண்டு படங்களின் பிரம்மாண்டத்திற்கு கொஞ்சமும் குறையாமல் இந்த வெப்தொடரும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த தொடருக்கு இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More photos

See all

Share

Share on WhatsApp